GuidePedia

1
பங்குச்சந்தை வரலாறு (History of Stock Market)

இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் மற்றொரு பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.
மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading)தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.
இது சென்செக்ஸ்(SENSEX) என்ப்படும் அளவுகோலால்(Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising)நன்றாக உள்ளதாகவும்குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.
சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30)கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது.
பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள்,
  • BSE 500
  • BSE 100
  • BSE 200
  • BSE PSU
  • BSE MIDCAP
  • BSE SMLCAP
  • BSE BANKEX
  • BSE Teck
  • BSE Auto
  • BSE Pharma
  • BSE Fast Moving Consumer Goods (FMCG)
  • BSE Consumer Durables
  • BSE Metal
பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின்(Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTVதொலைக்காட்சியிலும் காணலாம்.
தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. நிஃப்டிபங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.

Post a Comment Blogger

  1. The Meghalaya Board of School Education has issued the MBOSE SSLC Question Paper 2022. The board distributes MBOSE class 10 question papers in pdf format for English, Mathematics, Science & Technology, Computer Science, Hindi, and other courses. Meghalaya 10th Question Paper 2022 Candidates should download and practise these prior year question papers in order to gain an understanding of the test pattern, such as the types of questions that will be asked, the marking scheme, and so on.

    ReplyDelete

 
Top