GuidePedia

0
பங்குவர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் பொதுவாக செய்யும் தவறுகள்
     தினமும் தாங்கள் 90% சரியான பங்குகளை வாங்கி விற்க முடியும் என்று எண்ணுவது

     சில மாதங்களிலேயே பல லட்சங்ககளை ஈட்ட முடியும் என்று எண்ணுவது

     பங்குசந்தையில் வரும் ஏற்ற இறக்கங்களை எளிதாக கணிக்க முடியும் என்று எண்ணுவது

     நஷ்டத்தை ஈடுகட்ட அதே பங்கில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வது

இத்தகைய தவறான எண்ணங்களால் இன்று பல முதலீட்டாளர்கள் பெறுத்த நஸ்டம் அடைகின்றனர். மேலும் லாப இலக்கு இல்லாமலே பெறும்பான்மையானோர் வர்த்தகதில் ஈடுபட்டு வருகின்றனர். பங்குகளை எந்த விலையில் வாங்க வேண்டும் எந்த விலையில் விற்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் லாபத்தை அதிகரித்து நஷ்டம் குறையும்..


 உபரிப் பணத்தை கொண்டு முதலீடு செய்வது நல்லது.

 உங்கள் முதலிட்டினை 4 பாகங்களாக பிரித்து முதலிடு செய்வது நல்லது.

 பங்குசந்தையின் அனைத்து கருவிகளையும் (பியுச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்) பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது.

 இலக்கு நிர்ணயம் செய்து வர்த்தகம் செய்ய கற்றுகொள்ளவது நல்லது.

 சந்தை எவ்வழியில் செல்கிறதோ அவ்வழியிலே செல்வது நல்லது.

 நம் சக்திக்கு மேற்பட்ட அதிகப்படியான வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

 புரளிகளை நம்பி வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும்.

 ஒரே துறையில் உள்ள பங்குகளில் மட்டுமே அனைத்து பணத்தையும் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

 குறைந்த விலை பங்குகள் என்றும் ஆபத்தானவை, அதனினை அதிகம் வாங்குவதை தவிர்க்கவும்.

 ஒரு பங்கின் விலை இறங்கி கொண்டிருக்கும் போது அதை மேலும் மேலும் வாங்கி ஆவரெஜ் செய்வதை தவிர்க்கவும்.

 ஒரே நேரத்தில் பல பங்குகளைப் கொண்டு வர்த்தகம் செய்வதை தவிர்க்கவும்

 மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் “ஒரு காரணத்தோடு வர்த்தகம்” செய்யவும்.

Post a Comment Blogger

 
Top