GuidePedia

1
Analysis


Fundamental Analysis
அனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒருநிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவது. ஒருநிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டுகணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள் தான்பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்தின்திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்தபண்டமன்டல் அனாலிசசு உதவும். இந்த Fundamental Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டுபங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் பெறலாம்அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்தபண்டமன்டல் அனாலிசசு எவ்வாறு கணக்கிடப் படுகிறதுஎன்று பார்ப்போம் வாருங்கள்…
EPS என்றால் என்ன ? (Earning per share)
ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது.
உதாரணமாக:
HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்துவாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம்.தற்போதுஅப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும்.இந்த EPS முறையை Fundamental Analysis-க்குப்பயன்படுத்துவார்கள்.
PE Ratio என்றால் என்ன?
ஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல்வகுத்தால் கிடைக்கும் ஈவுத்தொகையே PE Ratioஎனப்படும். உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒருபங்கின் தற்போதைய விலை ரூ.200 அதன் EPS ரூ.25என்று வைத்துக்கொண்டால்
PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும்.
பொதுவாக ஓரு பங்கின் PE Ratio குறைவாக இருந்தால்அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பிவாங்கலாம். நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளைகண்டறிய Fundamental Analysis-ல் இதுவும் ஒரு முறையே.இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்தபங்கு என்று கூற முடியாது.
Book Value என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும்அந்நிறுவனதின் மொத்த சொத்துக்கள் இவற்றின் மொத்தமதிப்பே Book Value எனப்படும்.
பேலன்சு சீட் (Balance Sheet)
ஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன்மொத்த பங்குகளின் மதிப்பு (Equity Shares) மற்றும்அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்புஇவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சுசீட் எனப்படும். இது அந்நிறுவனத்தின் தற்போதையசெயல்பாட்டை தெளிவாக விளக்கும்.
நெட் வொர்த் (Net Worth)
ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்தசெலவுகள்,கடன்கள் ஆகியவகைகள் போகவருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான்அந்நிறுவனத்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட்வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இருக்க வேண்டும்.
SWOT அனாலிசசு
ஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threatsபோன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOTஅனாலிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம்,மற்றும் எதிர் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்றுகணக்கிட உதவுகிறது.
டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield)
இதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒருசிறிய கணக்கின் மூலம் விளக்கினால் உங்களுக்குஎளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட்கொடுத்துள்ளது என்றால்
பேஸ் வேல்யு (Face Value) = 1000
டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000
ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000
2000 க்கு லாபம் = 5000
1000 க்கு லாபம் = 2500
Projected Earning Growth (PEG)
பங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட,எதிர் காலத்தில் ஒரு நிறுவனம் மற்றும் அதன் பங்குகள்எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறையலாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இதுபோன்ற பல வழிகளில் ஒன்றுதான் PEG
TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG ?
PE Ratio = 30 என்றால்
PEG = 30 / 15
பொதுவாக PEG மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் அதிகளவு ரிட்டன் (Returns)கிடைக்கும்.


Post a Comment Blogger

  1. Hi everyone are you looking for a professional binary, forex and Bitcoin broker/manager who will guide and help manage your trade and help you earn meaningful profits all within seven days contact Mr Barry Silbert now for your investment plan. For he has helped me to earn 10,250 USD just with a little investment capital and with the aid of his trading software system that brings forth good trading signals i was able to trade and cash out on time and am still trading with him, if you need his assistance on how to recover your lost investment in bitcoin/binary Contact him now on whatsaap +447508298691. or contact him on his email address Email: Barrysilbert540 @ gmail.com. [WITH MR BARRY I BELIEVE THERE ARE STILL GOOD INDIVIDUALS WHO STILL HAVE GOOD INTENTION TO OTHERS. ONCE AGAIN THANKS MR BARRY.]

    ReplyDelete

 
Top