GuidePedia

0
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4


கடந்த மூன்று பதிவுகளாக TECHNICAL ANALYZINGகிற்கு தேவையான சில அடிப்படையான விசயங்களை பார்த்து வந்தோம், இப்பொழுது மேலும் சில விஷயங்களை பார்த்துவிடுவோம், அதற்க்கு முன் இந்த தொடரை படித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் உங்கள் ஆதரவுகளை பின்னோட்டம் மூலம் தெரிவித்து வரும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்களின் தொடர் ஆதரவும், பின்னூட்டமும் மட்டுமே இன்னும் அநேக விசயங்களை செய்வதற்கு என்னையும், இந்த வலைதள உரிமையாளர்களையும் தூண்டும் அகவே தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை பற்றி அறியத்தாருங்கள், சரி விசயத்திற்கு வருவோம், 

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில் வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும், 

இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE), இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம், உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE உள்ளது, 

ஆகவே இந்த முக்கியமான புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குவதும் முக்கியமாகிறது ஆகவே அதனைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம், இப்பொழுது சந்தையில் தினமும் ஒவ்வொரு பங்கிலும் உருவாகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் அந்த பங்குகளின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கு எப்படி பயன்படுகிறது என்பதினை பார்க்கலாம் அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம் அப்பொழுதுதான் TECHNICAL ANALYZING ஐ நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற கோணம் வரும் 

அதாவது எட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்று ஒரு பழமொழி இருக்கிறது இல்லையா, அது போல தான் TECHNICAL RULES ஐ அப்படியே பயபடுத்தினால் இங்கு உதவாது ஆகவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் அணுக வேண்டும், ஆகவே இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றிய விளக்கங்கள் மூலம் உங்களது கற்பனை கோணங்கள் மாறும் அதாவது ஒரு பொருளை பார்க்கும் விதம் மாறலாம், அதாவது ரோஜா செடியில் உள்ள முட்களை பார்த்து அழகான பூவின்

செடியில் கொடூரமாய் முட்கள் என்று நினைக்காமல், முக்கியமான பொருள்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் என்பதை இயற்க்கை நமக்கு எப்படி இந்த ரோஜா செடியில் இருக்கும் முட்கள் மூலம் புரியவைத்துள்ளது என்று பாசிட்டிவாக எண்ணிக்கொண்டு அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பயன்படுத்துவது போல உங்கள் கோணம் மாறவேண்டும் அதன் பொருட்டே இந்த விளக்கம், 

கவனமாக படியுங்கள், புரியவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் விடாதீர்கள் நானா நீனா என்று பார்த்து விடுங்கள் ஏனெனில் புரிந்து கொண்டு செல்வது முக்கியம் இல்லையேல் இந்த முயற்ச்சியே தோல்வி அடையும் ஆகவே புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே நல்லது, சரி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE மூலம் அந்த பங்குகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்கும் ஒரு முயற்ச்சியே, முதல் நாள் மாலை 3.30 க்கு முடிவடையும் ஒரு பங்கு அடுத்த நாள் சரியாக காலை 9.30 க்கு தொடங்கும், 

அப்படி தொடங்கும் போது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் வர்த்தகத்திற்காக திறந்து விடுவார்கள், (அந்த திறந்து விடும் நேரம் தான் 9.30 அப்படி வர்த்தகத்திற்காக திறந்துவிடப்படும் அனைத்து பங்குகளிலும் 9.30 மணியிலிருந்தே பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய கணக்குகள் வைத்து இருப்பவர்கள் அனைவரும்

வர்த்தகம் செய்யலாம்), அப்படி சந்தை வர்த்தகத்திற்காக திறந்தவுடன் முதலில் வர்த்தகமாகும் விலையே OPEN PRICE (துவக்க விலை) ஆகும், இந்த விலையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம், 

எப்பொழுதும் நேற்று முடிவடைந்த விலையிலே மறுநாள் எந்தப்பங்கும் வர்த்தகத்தை துவங்குவதில்லை, இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது, அதாவது முந்தய பதிவில் நாம் பார்த்த BUS STAND உதாரணத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் DEMAND ஐ பொறுத்து தான் அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று படித்து இருப்பீர்கள் இல்லையா, அந்த விஷயம் தான் பங்குசந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பங்கினுடைய OPEN விலையையும் முடிவு செய்யும் மேலும் ஒரு பங்கு இன்று இந்த விலையில் தான் தொடங்கும் என்று கண்டுபிடிக்க எந்த விதமான TECHNICAL கூறுகளும் இங்கு (எனக்கு தெரிந்து) இல்லை, 

மேலும் யார் முதலில் வர்த்தகத்தை தொடங்கி அந்த வர்த்தகம் நடந்து முடிகிறதோ அந்த விலைதான் அன்றைய தினத்தின் துவக்க விலை, இதை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் (அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை வர்த்தகம் ஆகும் அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் OPEN விலையை நிர்ணயித்த பாக்கியம் உங்களை சேரும்), ஆகவே இந்த OPEN விலையை எந்த TECHNICAL கூறுகளாலும் நிர்ணயிக்கமுடியாது என்ற சூழ்நிலையில் தானாக வரும் (யாராவது ஒரு TRADER மூலம்) இந்த OPEN விலை அனைத்து பங்குகளின் அன்றைய தினத்தின் INITIAL என்று சொல்லலாம் அதாவது கடவுளின் விலை என்று கூட வைத்துக்கொள்ளலாம் 

சில பங்குகளில் அந்த பங்கை OPERATE செய்பவர்கள் அதன் அனைத்து விலைகளையும் முடிவு செய்வார்கள், ஆனால் நாம் அனைத்து பங்குகளையும் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருப்பதால் அதை பற்றி தவிர்த்துவிடுவோம், சரி இந்த OPEN என்ற விலையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் அதாவது மாற்றுக்கோணம் என்னவென்றால் 

OPEN PRICE 

OPEN PRICE என்பது வெறும் ஒரு பங்கின் தொடக்க விலை மட்டும் இல்லை அன்றைய தினத்தின் அந்த பங்கின் வர்த்தக பாய்ச்சலை நிர்ணயிக்கும் முதல் புள்ளி, அதாவது அந்த பங்கில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் அந்த பங்கில் காட்டும் ஆர்வம் என்ன என்பதினையும், அந்த பங்கிற்கு உள்ள DEMAND என்ன என்பதினையும் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த புள்ளி முக்கியமானது, 

சில நேரங்களில் சில பங்குகளில் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலையும் ஒரே புள்ளியாக இருக்கும் அப்படி இருக்கும் போது தொடர்ந்து முன்னேற முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் தடையை சந்தித்து கீழே வரும் என்று எடுத்துக்கொள்ளலாம், அதே போல் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒன்றாக பெற்று இருந்தால் தொடர்ந்து கீழே இறங்க முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் SUPPORT களை பெற்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், ஆக வெறும் OPEN PRICE என்று எடுத்துக்கொள்ளாமல் இந்த புள்ளியை வைத்து அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்றும் நாம் அனுபவம் வர வர எளிதாக தெரிந்து கொள்ளலாம் ---

Post a Comment Blogger

 
Top